திரு. முரளி இராமநாராயணன் அவர்கள் தலைமையில் சங்க நிர்வாகத்தினருடன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
சமீபத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. முரளி இராமநாராயணன் அவர்கள் தலைமையில் சங்க நிர்வாகத்தினருடன் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதன் பேரில் முதல் கட்டமாக , பையனூர் நிலம் சம்பந்தமான ஆலோசனை மாண்புமிகு அமைச்சர் திரு. வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களின் அலுவலகத்தில் நேற்று நடந்தது . இதில் நமது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. முரளி இராமநாராயணன் அவர்கள் தலைமையில் உள்ள நிர்வாகத்தின் சார்பில்சங்கத்தின் செயலாளர் திரு. ஆர்.இராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு. .என். விஜயமுரளி , திரு.என்.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்ட போது எடுத்த படம் .