சலீம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் சலீம், அமைச்சரின் மகனை கொன்று விட்டு தப்பித்து விடுவார். அங்கிருந்து தப்பித்து விஜய் ஆண்டனி ஏஜெண்டாக மாறுகிறார் அங்கு சரத் குமார் தங்கையை திருமண ம் செய்து கொள்ள மந்திரி யான ஏ எல் அழகப்பன் தன் ஆட்களை ஏவி விஜய் ஆண்டனி யையும் ,அவரது மனைவியையும் தீர்த்துக் கட்டுகிறார் இதில் விஜய் ஆண்டனி தப்பிக்கிறார்
அப்போது பெய்யும் மழை விஜய் அண்டனிக்கு பிடிக்காமல் போகிறது. இது தான் “மழை பிடிக்காத மனிதன்
சலீம் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமாருடன் இணைந்து ஏஜெண்டாக பணிபுரிந்து வரும் விஜய் ஆண்டனி முதல் காட்சியில் அந்த மான் போகும் வழியில் இறங்கி கொள்ள சரத் இந்த ஊரும் புதுசு ,நீயும் புதுசு ,வம்பு தும்புக்கு போகாதே என எச்சரிக்கிறார் ஆனால் நடந்தது வேறு……
படத்தில் திரைக்கதை நன்றாக இருக்கிறது இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத நிறைய விஷயங்கள் இதில் இருக்கிறது. ஆக்சன் திரில்லராக வெளிவந்துள்ளஇந்த படம் விறுவிறுப்பாக செல்கிறது .
சரத்குமார், விஜய் ஆண்டனி, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, சத்யராஜ், தனஞ்சயா, சுரேந்தர் தாக்கூர், தலைவாசல் விஜய், மேகா ஆகாஷ், ப்ருத்வி அம்பர்
போன்றோர் ஒரு நடித்துள்ளனர் எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் கமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பி. பிரதீப், விக்ரம் குமார் எஸ். உற்பத்தி இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் தயாரித்து உள்ளனர்.
சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் விஜய் ஆண்டனிக்கு உதவும் கதாபாத்திரத்தில் வருகிறார் உதவியும் செய்கிறார் நம் மனதில் இடம் பிடிக்கிறார்
மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட போர்சன் குறைவு என்றாலும் அதை திறமையாக செய்திருக்கிறார்.
வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் எந்த சொந்தமும் இல்லாமல் ஒரு புதிய இடத்திற்கு வருபவனுக்கு அங்கு அம்மா, வாக சரண்யா கிடைக்கிறார். அந்த பாசமலையில் நனைந்து அந்த குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் உள்ள விஜய் ஆண்டனி மீது பாசம் காட்டும் சரண்யா நடிப்பு நன்றாக இருக்கிறது
எதுவும் இல்லாத ஒருவனை, எல்லாம் இருக்கும் ஒருவன் என்னவேண்டுமானலும் செய்யலாம் என நினைக்கும் போது ஏற்படுத்தும் பாதிப்பை வில்லாதி வில்லன் ஆக டாலி என்ற கதாபாத்திரம் தனஞ்செயாவுக்கு அருமையான வேடம்.
அவர் வட்டிக்கு பணம் தந்து அடியாட்களை வைத்துக்கொண்டு தனக்கு பணம் தராதவர்களை காப்பியில் விஷம் வைத்து கொள்ளும் கொடூர மனம் கொண்டவர் அவரால் மேக ஆகாசின் தந்தை தலைவாசல் விஜய் கொள்ளும் டாலியாக நடித்த தனஞ்செயாவின் நடிப்பு ஆர்ப்பாட்டம்
கிளைமாக்ஸ் அதிரடியான சண்டைக் காட்சியில் அசத்துகிறார்
விஜய் ஆண்டனி க்கு இந்தப்படம் ஒரு புது அடையாளம் அமைதியாக வந்து ஆர்ப்பாட்டம் இல்லாமல் வில்லன்களை புரட்டி எடுக்கும் அந்த ஆக்சன் காட்சியில் அதிர வைக்கிறார். தன்னை காதலிக்கும் மேகா ஆகாஷ் இடமிருந்து நான் காற்று மாதிரி எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போய் விடுவேன் என்னை நம்பி உன்னை வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளாதே என்று
சொல்லும் காட்சிகள் வில்லன்களுக்கு சவால் விடும் காட்சிகள் நன்றாக இருக்கிறது
மற்றும் சரண்யாவின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடுவது ஒரு குடும்பத்தை காப்பாற்ற தன்னையே பணயம் வைப்பது என மனதில் இடம் பிடிக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தில் திரைக்கதை நன்றாக இருக்கிறது இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத நிறைய விஷயங்கள் இதில் இருக்கிறது .
படத்தில் சொல்ல வந்த கருத்து இரண்டுமே சூப்பர். தீமை செய்பவன் அழியவேண்டும், என்று இல்லாமல் தீமை தான் அழிய வேண்டும் என இயக்குனர் விஜய் மில்டன் கூறிய விஷயம் மனதை தொடுகிறது. விஜய் ஆண்டனி,யுடன் ஒரு நாய் குட்டி, பாசம் காட்டுவது ரசிக்கவைக்கிறது.
யாருமே தெரியாத அந்த புது இடத்தில் முதல் நண்பனாக வரும் அந்த நாய்க்குட்டியை காப்பாற்றி அதற்கு ஒரு பிரச்சனை என்றவுடன் தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றும் அந்த காட்சிகள் மனிதனே யம் .
சரத்குமார் மற்றும் சத்யராஜ் இருவருக்கும் படத்தில் பெரிதளவில் ஸ்கோப் இல்லை. விஜய் ஆண்டனியின் நண்பராக வரும் பிருத்வி தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனி காப்பாற்றி காரில் ஏற்றுக் கொண்டு போய் படகில் ஏற்றி விடும் அந்த காட்சி தியேட்டரில் கைதட்டல். முரளி ஷர்மா காவல்துறை அதிகாரி யாக வந்து அலப்பறை செய்ய, மற்றும் இயக்குனர் ரமணாவின் நடிப்பு ஓகே.
ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது . குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளின் கேமராவை வைத்து மாயாஜாலம் செய்து இருக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர், மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் இருவரும்
விஜய் ஆண்டனி எப்போதும் இயக்குநர்களின் நடிகர். என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார்
தன்னால் முடிந்தவரை படத்தில் நடித்து கொடுத்ததோடு பிரமோசனுக்கும் வந்து தயாரிப்பாளர் கேற்ற நடிகராக பெயர் வாங்கி உள்ளார்
அச்சு ராஜாமணி விஜய் ஆண்டனி, இசையமைத்துள்ளனர் பின்னணி இசை மற்றும் பாடல்கள்
படத்திற்கு மிகப்பெரிய பலம். கே.எல். பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளனர். எந்த இடத்திலும் படம் தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு படத்தொகுப்பு உதவியிருக்கிறது
கலை இயக்குநராக ஆறுசாமி பணியாற்றியுள்ளார் சரண்யா நடத்தும் ஹோட்டல். டாளியின் ஹோட்டல் மற்றும் மேகாஆகாஸ் வீடு என்று ஆர்ட் டைரக்டர் கை வண்ணம் சிறப்பாக இருக்கிறது
விஜய் ஆண்டனி மழையில் நனைந்தவாறு கையில் உள்ள நாய் குட்டியை நனையாதவாறு மறைத்து எடுத்து செல்வதுபோல வரும் காட்சிகள் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது அதேசமயம் விஜய் ஆண்டனி தலையில் கேப்புடன் ஸ்டைலாக இருக்கும் அந்த லுக் நன்றாக இருக்கிறது
ஒளிப்பதிவாளர் ஒருவர் தனது பார்வையைக் காட்சிகளாக மாற்றும் போது அந்தப் படைப்பின் காட்சிகள் புதுமையான காணும் அனுபவத்தை அளிக்கும். படத்தை இயக்கும் இயக்குநரே அதற்கு ஒளிப்பதிவு செய்யும்போது அது நிச்சயம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. இப்படத்தினை விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவிலும் திரை கதையிலும் ஆக்சன் காட்சிகளிலும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்று பெயரை வாங்குகிறார் இயக்குனர் விஜய் மில்டன்
சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாத ஒரு நபருடன், யுத்தம் செய்யும் விஜய் ஆண்டனி, கடைசியில் சொல்லும் அந்த வசனம் நன்றாக இருக்கிறது. டாலியிடம் உன்னிடம் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு ஐந்து தலைமுறைகள் வாழலாம் ஆனால் நீ செய்வதெல்லாம் தீமையாக இருக்கிறது நன்மை செய்து பார் இந்த உலகமே உன்னை கொண்டாடும் என்று சொல்லும் வசன வரிகள் சூப்பர்!
குழந்தையே இல்லாத உனக்கு எதுக்கு இவ்வளவு பேராசை, என்று தப்பை சுட்டிக்காட்டி அவரை திருத்தும் இடம் மனிதநேயம் எட்டிப் பார்க்கிறது .
படத்தை முடித்த விதம் கிளைமாக்ஸ் காட்சியில் சத்யராஜின் உத்தரவுக்கேற்ப சரத்குமார் ,கையில் துப்பாக்கி எடுப்பது பரபரப்பான காட்சிகள். படத்தில் காமெடி என்று எதுவும் இல்லை காதல் காட்சிகளும் இல்லை ஆனாலும் கலகலப்பாக போகிறது.
ஒரு சின்ன நாய்க்குட்டி மீது விஜய் ஆண்டனி காட்டும் அன்பு அபிரதமாக இருக்கிறது. அந்த நாய்க்குட்டியின், காலை உடைத்த வில்லனை துவம்சம் செய்யும் விஜய் ஆண்டனியை கைதட்டி ரசிக்கிறார்கள்.
அந்தப் பெரிய மாலில், ஆறு பொம்மை களைக் கட்டி தொங்கவிட்டு, வில்லனுக்கு அதிர்ச்சி ஊட்டும் இடம் சிறப்பாக இருக்கிறது.
முகமே தெரியாத எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு நடக்கும் தவறுகளை தட்டி கேட்க யாராவது ஒருவர் வருவார் என்ற நியாயத்தின்படி கதை, திரைக்கதை, எழுதி இயக்கிய இயக்குனர் விஜய் மில்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் “மழை பிடிக்காத மனிதன்”என்று உலகில் யாரும் இல்லை இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை
படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மக்கள் தொடர்பாளர் திரு. சுரேஷ் சந்திரா அவர்களுக்கும், திரு. அப்துல் நாசர் அவர்களுக்கும், வாழ்த்துக்கள்