அறிவியல் இன்று முன்னேற்றங்களை கண்டு வருகிறது இவ்வுலகில் எதிர்காலத்தில் நல்ல செயல்களில் ஈடுபடும் மக்களை குற்றவாளிகளாகவும், தீய செயல்களில் ஈடுபடுபவர்களை உத்தமர்களாகவும் பார்க்கப்படலாம், என்ற கற்பனையை காமெடியாக சொல்வதே ‘வாஸ்கோடகாமா’ படத்தின் கதை. அதை காமெடி கலகலப்பாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
நல்லது செய்தால் கைது செய்து வாஸ்கோடகாமா என்ற சிறையில் அடைக்கும் காவல்துறை, கெட்டது செய்பவர்களை விடுதலை செய்கிறது. இப்படிப்பட்ட மாறுபட்ட சமூகத்தில் தொடர்ந்து நல்லவனாகவே பயணிக்கும் நாயகன் நகுலும், கெட்டவராக இருந்துவிட்டு வாஸ்கோடகாமா சிறைக்குள் நுழைவதற்காக நல்லவராக நடிக்கும் வம்சி கிருஷ்ணாவும் கைதிகளாக சிறைக்குள் செல்கிறார்கள். அவர்கள் ஏன் அந்த சிறைக்கு செல்கிறார்கள், என்பதை பல கிளைக்கதைகளுடன் நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆர்.ஜி.கே.
படம் முழுக்க என்னதான் நடக்கிறது எந்த உலகத்தில் நாம் இருக்கிறோம் என்று யோசிக்க வைக்கிறது இப்படி எல்லாம் ஒரு உலகம் இருந்தால் எப்படி இருக்கும் அல்லது எதிர்காலம் இப்படித்தான் இருக்குமா என்று யோசிக்கவும் வைக்கிறது அந்த சிறைச்சாலை உங்க போல் இருப்பதும் பளிச்சென்று இருப்பது ஷவர் பாத்ரூம் பளிச்சென்று இருப்பதும் தியானம் செய்ய உடலை கெட்டவர் என்று சொல்வதும் கத்தியால் குத்துவது எப்படி என்று பயிற்சி கொடுப்பதும் எல்லாமே புதுசு கண்ணா புதுசு: காமெடி கதையில் லாஜிக் பார்க்க கூடாது என்ற புதிய கண்ணோட்டத்தில் இயக்குநர் ஆர்.ஜி.கே, கதை சொல்லி ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.
வித்தியாசமான கதை அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் பக்குவப்பட்டு இருக்கிறார்களா என்பது தான் இங்கு யோசிக்க வேண்டி உள்ளது. கதையை வித்தியாசமாக யோசித்துவிட்டு, அதற்கான திரைக்கதையை எழுதியிருக்கும் இயக்குநர் ஆர்.ஜி.கே, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, என்ன நடக்கிறது, என்று குழப்பமாகவும் சொல்லியிருக்கிறார்.
ஆரம்பத்தில் வரும் அந்த ஆஸ்பத்திரி கட்சி ரசிக்க வைக்கிறது சின்ன சுண்டு விரல் காயத்துக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஒரு நபரை எப்படி கோமாஸ்டேஜ் வரை கொண்டு சென்று அவரை மரணப்படுக்கையில் படுத்தி அனுப்புகிறார்கள் என்று சொல்லும் பொழுது ஆக வித்தியாசமாக இருக்கிறது என்று யோசித்தால் தோன்றினாள் அதன்பிறகு கொஞ்சம் கதை தடுமாற ஆரம்பித்து விட்டது அது போலவே ஒவ்வொரு காட்சியும் இன்று நாட்டில் நடக்கும் பலவிதமான மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளை நகைச்சியாகவும் சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
நாயகனாக நடித்திருக்கும் நகுல், நாயகியாக நடித்திருக்கும் அர்த்தன பினு, வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், பிரேம்குமார், படவா கோபி, சேசு என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
எல்லோரும் நடிப்பும் ரசிக்க வைக்கிறது இயக்குனர் நன்றாக அவர்களிடம் வேலை வாங்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர் என்.வி.அருணின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு. ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார். படத்தொகுப்பாளர் தமிழ்குமரன் நிறைய கஷ்ட்டப்பட்டிருப்பார் என்பது காட்சிகளைப் பார்த்தாலே தெரிகிறது. எதிர்காலத்தில் இந்த சமூகமும், மக்களின் வாழ்க்கையும் மாறுபட்டு இருக்கும், என்ற இயக்குநர் ஆர்.ஜி.கே-வின் கற்பனை வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.
நடிகர் நகுல் தமிழ் சினிமாவில் தனக்கு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று இந்த வாஸ்கோடகாமா படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார்.அவர் நம்பிக்கை வீண் போகவில்லை கதையே இல்லாமல் எத்தனையோ தமிழ் சினிமாக்கள் கலகலப்புக்கும் சுவாரசியத்துக்கும் வலு சேர்த்து இருக்கிறது இந்த படத்தில் கே எஸ் ரவிக்குமார் வரும் போர்ஷனில் புதுமை முனீஸ் காந்த் வரும் காட்சிகளில்.கலகலப்பு பிஜிலி வரும் காட்சிகளில் தாதா பந்தா ஆனந்தராஜ் கூறும் காட்சிகளில் ஆனந்தம் கோவர்த்தனாக வம்சி வரும் காட்சிகளில் வீரியம் வீரியம் என்று பாராட்டலாம் காமெடிக்காகவும் கலகலப்பு காகவும் பார்க்கலாம்