Take a fresh look at your lifestyle.

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல்!

69

இனி, அம்மன் கோவிலெங்கும் மன்சூர் அலிகான் பாடல் ஒலிக்கும்!

நடிகர் மன்சூர் அலிகான் பக்தி பரவசத்துடன் தானே அம்மன் பாடலை எழுதி, அதற்கு தானே இசையமைத்துள்ளார்!

ஜெயக்குமார்.ஜே இயக்கத்தில், மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘சரக்கு’. இந்தப் படத்தில் தான் மன்சூர் அலிகானின் பக்தி பாடல் ஒன்று இடம்பெறுகிறது! மற்ற பாடல்களை சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்!

செப்டம்பர் 19’ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று ‘சரக்கு’ படத்தின் திரை முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற உள்ளது!